‘விஎஸ்ஓபி’யில் போலீஸாக வருகிறாரா விஷால்?

‘விஎஸ்ஓபி’யில் போலீஸாக வருகிறாரா விஷால்?

செய்திகள் 13-Aug-2015 11:09 AM IST Chandru கருத்துக்கள்

நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது இயக்குனர் ராஜேஷின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம். ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என ஏற்கெனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷால் போலீஸாக வருவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘பாயும் புலி’ படத்தில் சீரியஸ் போலீஸாக நடித்திருக்கும் விஷால் ‘விஎஸ்ஓபி’யில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் போலீஸாக வருவாராம். படத்தின் க்ளைமேக்ஸில் விஷால் சம்பந்தப்பட்ட இந்த காட்சிகள் இடம்பெறும் என்கிறார்கள்.

ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களில் ஆர்யாவும், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;