காந்தி பிறந்தநாளில் ‘நானும் ரௌடிதான்’

காந்தி பிறந்தநாளில் ‘நானும் ரௌடிதான்’

செய்திகள் 13-Aug-2015 10:51 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார். முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இதனால் அனிருத்தின் அதிரடி இசையில் விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடன அசைவுகளை இப்படத்தில் கண்டுகளிக்கலாம் என்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இறைவி’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. இதனைத் தொடர்ந்து காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதே நாளில் வுண்டர்பார் ஃபிலிம்ஸின் இன்னொரு படமான ‘விஜபி 2’ படம் ரிலீஸ் செய்ய ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நானும் ரௌடிதான் படத்திற்கு அந்த தேதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;