‘புலி’ ராணிக்கு இன்று ஸ்பெஷல் டே!

‘புலி’ ராணிக்கு இன்று ஸ்பெஷல் டே!

செய்திகள் 13-Aug-2015 10:37 AM IST Chandru கருத்துக்கள்

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் மூலம் தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கியிருக்கும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருக்கும் நேரடித் தமிழ்ப் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கததில் விஜய் நடிக்கும் இப்படத்தில், விஜய்க்கு அடுத்தபடியான முக்கியத்துவம் உள்ள கேரக்டர் ஸ்ரீதேவிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பபெரிய ராஜ்ஜியம் ஒன்றின் ராணியாக ‘புலி’ படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

படப்பிடிப்பு, டப்பிங் என ‘புலி’ சம்பந்தப்பட்ட முக்கிய வேலைகளை முடித்துவிட்டு, புலி படத்தின் வெளியீட்டிற்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று முக்கியமான நாள். ஆம்... இன்று (ஆகஸ்ட் 13) அவரின் பிறந்தநாள். ஸ்ரீதேவியின் பிறந்தநாள் பரிசாக அமையட்டும் ‘புலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றி.

வாழ்த்துக்கள் ராணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;