கார்திக் சுப்புராஜின் ‘அவியல்’

கார்திக் சுப்புராஜின் ‘அவியல்’

செய்திகள் 13-Aug-2015 10:16 AM IST Chandru கருத்துக்கள்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து தற்போது ‘இறைவி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, ராதா ரவி, கருணாகரன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் கார்திக் சுப்புராஜ் உருவாக்கிய ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் வேலைகளும் இன்னொருபுறம் போய்க் கொண்டிருக்கின்றன.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான குறும்படம் உட்பட 6 குறும்படங்களை இணைத்து ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படமாக தனது முதல் படைப்பை வெளியிட்டது இந்த ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ நிறுவனம். தற்போது இதன் அடுத்த படைப்பாக விரைவில் வெளிவரவிருக்கிறது ‘அவியல்’ எனும் படைப்பு. வித்தியாசமான 5 குறும்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இந்த ‘அவியல்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;