சிரஞ்சீவி வழங்கிய ‘கொல்லப்புடி சீனிவாஸ் விருது’

சிரஞ்சீவி வழங்கிய ‘கொல்லப்புடி சீனிவாஸ் விருது’

செய்திகள் 13-Aug-2015 10:02 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த தெலுங்கு பட இயக்குனர் கொல்லப்புடி சினீவாஸ் நினைவாக வருடந்தோறும் இந்திய அளவில் சிறந்த அறிமுக இயக்குனரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கி வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘கொல்லப்புடி சீனிவாஸ் மெம்மோரியல் ஃபவுண்டேஷன்’ சார்பில் கடந்த 17 ஆண்டுகளாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருது ‘Q’ என்ற ஹிந்தி படத்தை இயக்கிய சஞ்சீவ் குப்தாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இயக்குனர் சஞ்சீவ் குப்தாவுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் மெம்மோரியல் விருதை வழங்கினார். இந்த விருது கேடயம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் அடங்கியது. இவ்விழாவில் நடிகர் சித்தார்த், நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், அனுஷ்கா, பூஜா குமார், ஹிந்தி பட இயக்குனரும், நடன இயக்குனருமான ஃபாராகான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பெரும்பாலான மொழிப் படங்களிலிருந்து இவ்விருதுக்குரியவரை தேர்வு செய்கிறார்கள். இந்த வருடத்திற்கான விருதுக்கு 27 படங்கள் பரிசீலிக்கப்பட்டது. அந்த 27 படங்களிலிருந்து சஞ்சீவ் குப்தா இயக்கிய ‘Q’ படம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;