‘புலி’ வில்லனுடன் பெங்களூருவில் கே.எஸ்.ரவிக்குமார்?

‘புலி’ வில்லனுடன் பெங்களூருவில் கே.எஸ்.ரவிக்குமார்?

செய்திகள் 12-Aug-2015 2:42 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தொடர்ந்து, சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். விஜய்யின் ‘புலி’யில் வில்லனாக நடித்து முடித்த கையோடு கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்துள்ளார் சுதீப். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் சுதீபுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10-ஆம் தேதி பெங்களூரில் துவங்கியது. அங்கு ஹீரோ சம்பந்தமான அறிமுக சண்டை காட்சியை கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில் படமாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். ‘ராம் பாபு புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராம் பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் கதையை சிவா எழுதியிருக்கிறார். இந்த படத்திற்கு ‘முடிஞ்சா இவனைப் பிடி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;