நாகர்கோயிலில் துவங்கியது ‘உள்குத்து’

நாகர்கோயிலில் துவங்கியது ‘உள்குத்து’

செய்திகள் 12-Aug-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

'திருடன் போலீஸ்' படத்தை தொடர்ந்து கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குனர் கார்த்திக் ராஜுவும் இணைந்து வழங்கும் படம் 'உள்குத்து'. இதன் படப்பிடிப்பு நேற்று நாகர்கோவிலில் துவங்கியது.

‘‘மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் கதை இது. அதனால் நாகர்கோவிலை கதைக்களமாக தேர்வு செய்துள்ளோம். ஒரு பக்கம் அரேபிய கடல் மறு புறம் மேற்கு தொடர்ச்சி மலை என்று நாகர்கோவில் ஒரு அழகிய நகரமாகும். அந்த நகரத்தின் கலாச்சாரமும், அந்த நகரத்து மக்களின் வாழ்வியலும் மிகவும் சுவராசியமானது. என்னை கவர்ந்த அந்த நகரத்தின் அழகை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் கார்த்திக் ராஜு.

இப்படத்தில் தினேஷ், நந்திதா, பாலசரவணன், சரத், ஜான்விஜய், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ்லீ 2 நிமிட காட்சி - வீடியோ


;