‘தாமிரபரணி’ பானுவிற்கு திருமணம்!

‘தாமிரபரணி’ பானுவிற்கு திருமணம்!

செய்திகள் 11-Aug-2015 2:56 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கிய ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பானு (முக்தா). தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பானு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக விளங்கும் ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை மணக்கவிருக்கிறார் பானு! இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி கேரளா, கொச்சியில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இம்மாதம் 30 ஆம் தேதி திருமணமும் நடைபெறவிருக்கிறது. விரைவில் ரிலீசாகவிருக்கும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் பானு நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;