‘வாலு’ ரிலீசுக்கு உதவியவர்களுக்கு டி.ஆர்.நன்றி!

‘வாலு’ ரிலீசுக்கு உதவியவர்களுக்கு டி.ஆர்.நன்றி!

செய்திகள் 11-Aug-2015 2:46 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை தனது ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் வெளியிடுகிறார். பல தடைகளை தாண்டி ரிலீசாகவிருக்கும் ‘வாலு’ பட வெளியீடு குறித்து டி.ராஜேந்தர் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
‘‘வாலு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமாக ‘மேஜிக் ரேஸ்’ நிறுவனத்திற்கும் இப்படத்தை தயாரித்த ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்திற்கும் எழுந்த பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டது. மேலும் இந்த பட வெளியீடு சம்பந்தமாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி கிடைத்துள்ளது. எனவே ‘வாலு’ படம் ரிலீசாவதில் இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டது. அதனால் ‘வாலு’ படம் திட்டமிட்டபடி வருகிற 14- ஆம் தேதி ரிலீசாகும். நாளை முதல் படத்திற்கான முன் பதிவுகள் தொடங்கவிருக்கிறது. ‘வாலு’ படத்தை தமிழகத்தில் 300 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சிம்பு, நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் சிம்பு படத்திற்கு யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் விஜய் தானாக முன் வந்து இப்படம் வெளியாவதற்கு மிகவும் உதவியாக இருந்தார். அதைப்போல விஜய்யின் உதவியாளரும், ‘புலி’ பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமாரும் இப்படம் வெளியாக பல விநியோகஸ்தர்களிடம் பேசி பெரும் உதவியை புரிந்துள்ளார். இப்படம் வெளியாக உதவிய நடிகர் விஜய், பி.டி.செல்வகுமார் மற்றும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;