‘மாயா’ கலரிஸ்டுக்கு கேரள அரசு விருது!

‘மாயா’ கலரிஸ்டுக்கு கேரள அரசு விருது!

செய்திகள் 11-Aug-2015 12:35 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’, ‘எனக்குள் ஒருவன்’, ‘ஓகே கண்மணி’, ‘காஞ்சனா’, தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மாயா’ உட்பட கிட்டத்தட்ட150 தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் COLOURIST-ஆக (DIGITAL COLOUR GRADING) பணியாற்றியவர் ரங்கா. PRISM & PIXELS நிறுவனத்தில் தலைமை கலரிஸ்டாக பணிபுரிந்து வரும் இவருக்கு சிறந்த ‘கலரிஸ்ட்’டுக்கான கேரள அரசு விருது கிடைத்துள்ளது.

மலையாள சினிமாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து கேரள அரசு வருடந்தோறும் விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களின் பட்டியலை கேரள அரசு நேற்று அறிவித்தது. இதில் சிறந்த கலரிஸ்டாக ரங்கா தேர்வாகி அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ மற்றும் ‘இயோபின்டெ புஸ்தகம்’ ஆகிய படங்களில் சிறந்த முறையில் DIGITAL COLOUR GRADING செய்தமைக்காக ரங்காவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நாம் அவரிடம் பேசும்போது, ‘‘கேரள அரசு வழங்குவதை போல் சிறந்த கலரிஸ்ட்டுக்கான விருது தமிழில் வழங்கப்படுவதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. கேரள அரசு வழங்குவதை போன்று தமிழக அரசும் சினிமாவில் உள்ள இதுபோன்ற பிரிவுகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், அது என்னைப் போன்ற கலைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்’’ என்றார்.

மதுரை சொந்த ஊராக கொண்ட ரங்கநாதன் இத்துறையில் மேலும் மேலும் பல சாதனைகள் படைத்து விருதுகள் பெற ‘டாப் 10 சினிமா’ சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;