மேலும் 2 புதிய சாதனைகளைப் படைத்த ‘பாகுபலி’

மேலும் 2 புதிய சாதனைகளைப் படைத்த ‘பாகுபலி’

செய்திகள் 11-Aug-2015 12:26 PM IST Chandru கருத்துக்கள்

படம் வெளியானது முதல் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் 5வது வாரமாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்ச வசூலைக் குவித்திருக்கும் இப்படம் (தோராயமாக உலகளவில் 545 கோடி என்று கூறப்படுகிறது) தற்போது மேலும் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறதாம்.

இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்த அமீர்கானின் ‘தூம் 3’ படத்தின் சாதனையை முறியடித்து ‘பாகுபலி’ 3ஆம் இடத்தை கைப்பற்றியிருக்கிறது. முதல் 2 இடங்களில் அமீர்கானின் பிகே படமும், சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜானு’ம் இருக்கின்றன.

சத்தமேயில்லாமல் இன்னொரு சாதனையையும் படைக்கவிருக்கிறது ‘பாகுபலி’ திரைப்படம். தென்னிந்திய சினிமா டிரைலர்/டீஸர்களில் இதுவரை ஷங்கரின் ‘ஐ’ பட டீஸர் மட்டுமே 1 கோடி பார்வையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது. தற்போது ‘பாகுபலி’ படத்தின் தெலுங்கு டிரைலரும் இந்த சாதனையைப் படைக்கவிருக்கிறது. இதுவரை 99 லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்த டிரைலரை பார்வையிட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் 25 ஆயிரம்பேர் பார்க்கும் பட்சத்தில் 1 கோடி பேர் என்ற மைல்கல்லை எட்டிவிடும் ‘பாகுபலி’ டிரைலர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;