அமானுஷ்யங்கள் நிறைந்த ‘கா…கா…கா…’

அமானுஷ்யங்கள் நிறைந்த ‘கா…கா…கா…’

செய்திகள் 11-Aug-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

குறுகிய காலத்திற்குள் எடுத்து முடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ‘கா…கா…கா..’. ஹாரர், த்ரில்லர் பட வரிசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக், கிரண், மேகாஸ்ரீ, சங்கீதா பட், யோகி பாபு, நாசர், ஜெயசுதா, பேபி யுவினா ஆகியோர் நடிக்க, மனோன் இயக்கியுள்ளார். கிரண் பதிகொண்டா தயாரித்துள்ள இப்படத்திற்கு சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை சசிகுமார் கவனித்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் மனோன் கூறும்போது, ‘‘ஹாரர், த்ரில்லர் படங்களின் வரிசையில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒரு காக்காவும், பட்டுப்போன ஒரு மரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதையெல்லாம் கிராஃபிக்சில் உருவாக்கலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு யதேச்சையாக பட்டுப்போன ஒரு மரம் கிடைத்தது. அதை கிரேன் மூலம் வேரோடு பிடுங்கி வந்து படப்பிடிப்பு தளத்தில் நட்டு படப்பிடிப்பை நடத்தினோம். இதுபோன்று இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்களும் நடந்தது. இதுபோன்ற பல சுவாரசியமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது ‘கா கா கா’ படம், இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டீசர்


;