அதர்வாவின் ‘ருக்குமணி வண்டி வருது’

அதர்வாவின் ‘ருக்குமணி வண்டி வருது’

செய்திகள் 11-Aug-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சண்டிவீரன்’. இப்படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் ‘ஈட்டி’, ‘கணிதன்’ ஆகிய படங்கள் வளர்ந்து வருவதோடு ‘ருக்குமணி வண்டி வருது’ என்ற படத்திலும் நடிக்கிறார் அதர்வா. ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ என்ற படத்திற்காக இளையராஜா இசை அமைத்து பாடிய ‘ருக்குமணி வண்டி வருது’ பாடல் வரியை தலைப்பாக வைத்திருக்கும் இப்படத்தை ராஜ்மோகன் இயக்குகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். நடன இயக்குனராக இருந்து நடிகையானவர் பூஜா ஜாவேரி. தற்போது தனுஷ் நடிக்க, பிரபு சாலமன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஜாவேரி! ‘ருக்குமணி வண்டி வருது’ படத்தின் கதை தமிழ் நாடு - கேரளா எல்லை பகுதியில் நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளதாம். அதர்வா, பூஜா ஜாவேரியுடன் தம்பி ராமையா, ‘பட்டியல்’ சேகர், எஸ்.பி.சரண், மலையாள நடிகர் சலீம் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி கொடைக்கானலில் ஆரம்பமாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;