ஆகஸ்ட் 14ல் ‘வாலு’ உறுதி... சிம்பு, ஹன்சிகா உற்சாகம்!

ஆகஸ்ட் 14ல் ‘வாலு’ உறுதி... சிம்பு, ஹன்சிகா உற்சாகம்!

செய்திகள் 11-Aug-2015 10:02 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் ‘வாலு’ படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகுமா? என்ற சந்தேகம் நேற்று நிலவி வந்தது. ஆனால், எல்லா தடைகளையும் தாண்டி வரும் வெள்ளிக்கிழமை வாலு ரிலீஸாவது 100% சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை இயக்குனர் விஜய் சந்தரும், நடிகர் சிம்புவும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்கள்.

படம் வெளியாவதற்கு உறுதுணையாய் இருந்ததற்காக நடிகை ஹன்சிகாவிற்கு ட்வீட் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய் சந்தர். அதற்கு ஹன்சிகாவும் ‘எப்போதும் சப்போர்ட் உண்டு’ என தெரிவித்திருக்கிறார். ‘வாலு’ ரிலீஸ் உறுதியானதை அடுத்து சிம்பு ரசிகர்கள் தங்களது பழைய சோகங்களை மறந்து உற்சாகமாகியுள்ளனர். இன்று முதல் படத்தின் முன்பதிவு வேலைகளும் துவங்கிவிட்டன.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தாங்கள் இணைந்து நடித்த படம் வெளியாவதால் உற்சாகமாகியுள்ளனர் சிம்புவும், ஹன்சிகாவும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;