வாலு சர்ச்சை : ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

வாலு சர்ச்சை : ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

செய்திகள் 10-Aug-2015 11:47 AM IST Chandru கருத்துக்கள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படமும் ‘வாலு’ படமும் ரிலீஸாகவிருந்தது. இதில் ‘விஎஸ்ஓபி’ படத்திற்கான தியேட்டர் புக்கிங், முன்பதிவு ஆகிய வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. ஆனால், வாலு படத்தின் தியேட்டர் லிஸ்ட் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் காய் நகர்த்துவதாகக் கூறி ரசிகர்கள் சிலர், ட்விட்டரில் உதயநிதி பேரில் எதிர்மறையாக டிரென்ட் செய்தார்கள்.

இதனைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ‘‘ரொம்பவும் காமெடியா இருக்கு. ‘வாலு’ படத்தை நான் ஏன் தடுக்க வேண்டும்? என்னால் எப்படி தடுக்க முடியும்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ஒரு முடிவுக்கு வரும்முன் நன்றாக யோசியுங்கள்.’’ என்றும்,

‘‘இன்று காலை முதல் முழுநீள காமெடிக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடுத்தமுறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். முட்டாள்தனம்! எந்த காரணமுமில்லாமல் என்னை டிரென்ட்டில் கொண்டுவந்த நண்பர்களுக்கு நன்றிகள்!’’ என்றும்,

‘‘நான் எந்த நடிகருக்கும், நடிகர்களின் ரசிகர்களுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... மற்றவர்களைப் பற்றி கமென்ட் செய்யும் முன்பு, உங்களுடைய மூளையை (மூளை இருந்தால்) உபயோகியுங்கள்!’’ என்று காட்டாமாக பதிலடி கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;