ரஜினிக்கு மகளாகும் தன்ஷிகா!

ரஜினிக்கு மகளாகும் தன்ஷிகா!

செய்திகள் 10-Aug-2015 11:15 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரம் மலேசியாவில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இவர்களுடன் ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ’கலைப்புலி’ எஸ். தாணு மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் படம், ‘லிங்கா’வை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் இது என்பதால் இப்படம் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;