‘வாலு’வுக்கு மீண்டும் சிக்கலா? - சிம்பு ட்வீட்டால் பரபரப்பு

‘வாலு’வுக்கு மீண்டும் சிக்கலா? - சிம்பு ட்வீட்டால் பரபரப்பு

செய்திகள் 10-Aug-2015 10:40 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ ரிலீஸுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் சிம்பு அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். ஆனால், நேரம் நெருங்க, நெருங்க படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகத்தை கிளப்பி வருகிறது. வாலுவுடன் ரிலீஸாகும் இன்னொரு படமான ‘வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் போஸ்டர்களும், சேனல் விளம்பரங்களும் பிஸியாக வெளிவந்து கொண்டிருக்க, ‘வாலு’ பட ரிலீஸ் குறித்து எந்த சப்தமும் இல்லாமல் இருக்கிறது. அதோடு ‘விஎஸ்ஓபி’க்கான முன்பதிவுகளை ஒருசில தியேட்டர்களில் துவங்கிவிட்டார்கள். ஆனால் ‘வாலு’ படத்திற்கு இதுவுரை எந்த தியேட்டரிலும் முன்பதிவு துவங்கவில்லை.

இந்நிலையில், நடிகர் சிம்பு நேற்று செய்த ட்வீட்களால் மீண்டும் ‘வாலு’ ரிலீஸுக்கு சிக்கலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ‘‘வாலு பட ரிலீஸை தடுத்து நிறுத்துவதற்கு இப்போதும் சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. கடவுள் இதற்கு மீண்டும் பதில் சொல்வார்!’’ என்றும் ‘‘வாழு... வாழ விடு. கடவுள் ஆசீர்வதிப்பார்!’’ என்றும் ட்வீட் செய்துள்ளார். அதோடு நேற்றிரவு மீண்டும் ஒரு ட்வீட்டில், ‘‘ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்... கடவுள் அருளால் எல்லாம் சரியாகிவிடும். ஏதாவது இருக்கும்பட்சத்தில் நானே அறிவிக்கிறேன்... எனவே அமைதியாக இருங்கள்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்புவின் மேற்படி ட்வீட்களால், வாலு படம் 14ஆம் தேதி ரிலீஸாகுமா? இல்லையா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி ட்ரைலர்


;