ஆயுதபூஜை அன்று களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம்!

ஆயுதபூஜை அன்று களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம்!

செய்திகள் 7-Aug-2015 5:34 PM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ‘ரோடு டிராவலை’ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனமும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, ‘பர்னிங் ஸ்டார்’ சம்பூர்னேஷ் பாபு உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

முதல்முறையாக இப்படத்தின்மூலம் விக்ரமுடன் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். இவர்களது கூட்டணியில் உருவாகிவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் பாடல்கள் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ். அக்டோபர் 21ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு புதன்கிழமையே படத்தை ரிலீஸ் செய்வதாக ட்வீட் செய்திருக்கிறார் அவர்.

‘ஐ’ படத்திற்குப் பிறகு வெளியாகும் விக்ரம் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது ‘10 எண்றதுக்குள்ள’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;