தயாரிப்பாளராகிறார் ஸ்ருதிஹாசன்!

தயாரிப்பாளராகிறார் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 6-Aug-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தான் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் குறும்படங்களுக்காக யூ ட்யூபில் ஒரு சேனல் துவங்கினார். இதனை தொடர்ந்து இப்பொது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். ’இசிட்ரோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். எதிர்காலத்தில் இந்நிறுவனம் சார்பில் திரைப்படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாரம்! இந்த நிறுவனம் துவங்கியதற்கு ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசன் பாராட்டு தெரித்துள்ளார். அப்போது, ‘தயாரிப்பு நிறுவனம் துவங்குவது பெரிய விஷயமில்லை, அதன் மூலம் நல்ல படைப்புகளை தயாரிப்பது தான் மிக முக்கியம்’ என்றும் ஸ்ருதிக்கு அறிவுரை கூறினாராம் கமல்ஹாசன்! இந்த நிறுவனம் மூலம் திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்ருதி ஹாசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வி ஐ பி 2 - மோஷன் போஸ்டர்


;