38 நாட்களில் படத்தை முடித்த கமல்!

38 நாட்களில் படத்தை முடித்த கமல்!

செய்திகள் 6-Aug-2015 10:21 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அவர் அடுத்து நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் வேலைகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. 38 நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் உதவியாளர் ரமேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இப்படத்தில் பாடல்கள் கிடையதாம். ஒரேயொரு புரோமோஷன் சாங் மட்டும்தான் உள்ளதாம். இப்படத்தில் கமல்ஹாசனுடன் பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ‘பாபநாசம்’ புகழ் ஆஷா சரத் ஆகியோரும் நடித்துள்ளனர். தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான் தான் இந்த படத்திற்கும் இசை அமைப்பாளர். தமிழ், தெலுங்கு என் இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கிறது ‘தூங்காவனம்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;