விஜய் - மகேஷ்பாபு இணையும் தமிழ், தெலுங்கு படம்?

விஜய் - மகேஷ்பாபு இணையும் தமிழ், தெலுங்கு படம்?

செய்திகள் 6-Aug-2015 9:12 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப் படங்கள் அனைத்தும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி கல்லாகட்டி வருவது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தெலுங்கில் வெளியாகும் படங்கள் இங்கே நேரடியாக தெலுங்கிலேயே வெளியாவதோடு சரி. மொழிமாற்றம் எல்லாம் செய்யப்படுவதில்லை. இதில் விதிவிலக்கு ராஜமௌலி படங்கள் மட்டுமே. ஆனால், சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியைப் பார்த்து தெலுங்கு திரையுலகமே மிரண்டு போயிருக்கிறது. இதனால் இனி தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களை தமிழில் ‘டப்’ செய்து விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவாக மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி நாளை (ஆகஸ்ட் 7) வெளியாகவிருக்கும் தெலுங்குப் படமான ‘ஸ்ரீமந்துடு’, தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியாகவிருக்கிறது.

செல்வந்தன் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் மகேஷ்பாபு. இனி தன் படங்கள் தொடர்ந்து தமிழில் டப்பிங் செய்யப்படும் என்றும், நேரடி தமிழ்ப் படத்தில் விரைவில் நடிப்பேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். ‘இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் தமிழில் எந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்... விஜய்யா? அஜித்தா? சூர்யாவா?’ என மகேஷ்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சட்டென மகேஷ்பாபு சொன்ன பதில் ‘விஜய்’. விஜய்யும் அவரும் ஏற்கெனவே இரண்டொருமுறை சந்திந்துப் பேசியிருப்பதாகவும் மகேஷ்பாபு தெரிவித்தார். இதனால் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் ஒன்றில் விஜய்யும், மகேஷ்பாபுவும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;