பல் டாக்டரின் பேய் படம்!

பல் டாக்டரின் பேய் படம்!

செய்திகள் 5-Aug-2015 2:37 PM IST VRC கருத்துக்கள்

பேய் பட வரிசையில் அடுத்து வரவிருக்கும் படம் ‘ஜின்’. நகைச்சுவை பின்னணியில் சொல்லப்படும் இந்த பேய் கதையில் பல் டாக்டர் மாயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வந்தது குறித்து டாக்டர் மாயா கூறும்போது

‘‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை! அதிலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசை. அவர் இயக்கிய 'கஜினி' படத்தின் நாயகி கல்பனா கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நடிகைகளில் எனக்கு ஜெனிலியாவை ரொம்பவும் பிடிக்கும். இப்போது நான் நடித்துள்ள ‘ஜின்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகர்களாக ரமீஸ் ராஜா, ‘மெட்ராஸ்’ கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் காளி வெங்கட், ‘காதலில் சொதப்புவது எப்படி’ படப்புகழ் அர்ஜுனன், ‘முண்டாசுபட்டி’ முனீஸ் காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தை தொடர்ந்து எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;