ஹரியின் உதவியாளர் இயக்கும் படம்!

ஹரியின் உதவியாளர் இயக்கும் படம்!

செய்திகள் 5-Aug-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

‘நாளைய இயக்குனர் சீசன் 3’ ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் ‘சிங்கம் 2’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான பிரசாந்த் ‘யானும் தீயவன்’ என்ற படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் படமாம் இது. இப்படத்தில் புதுமுகம் அஷ்வின்செநீவ் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜுசுந்தரம் நடிக்க, இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை பிரசன்னாவும் கவனிக்கிறார்கள். ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இணைந்து ‘பெப்பி சினிமாஸ்’ சார்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;