தம்பிராமையா மகன் அறிமுகமாகும் ‘அதாகப்பட்ட மகாஜனங்களே’

தம்பிராமையா மகன் அறிமுகமாகும் ‘அதாகப்பட்ட மகாஜனங்களே’

செய்திகள் 5-Aug-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. ‘சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ரமேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்பசேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரேஷ்மா ரத்தோர் நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பாண்டியராஜன், மனோபாலா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் இன்பசேக்ர் கூறும்போது,

‘‘நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்கு போட்டாலும் அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேறு ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த கதைக் கருவை மையமாக வைத்து விறுவிறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படமே ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்றார்.

இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ‘அட்டகத்தி’ ‘குக்கூ’ படஙக்ளுக்கு ஒளிப்பதிவு செய்த பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

12-12-1950 - டிரைலர்


;