விஷ்ணுவுடன் இணையும் ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி!

விஷ்ணுவுடன் இணையும் ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி!

செய்திகள் 5-Aug-2015 10:28 AM IST Chandru கருத்துக்கள்

டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் ‘டார்லிங்’காக ஒட்டிக்கொண்ட நிக்கி கல்ராணிக்கு தற்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் வெளியான ‘யாகாவராயினும் நா காக்க’ படத்தைத் தொடர்ந்து தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘கோ 2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நிக்கி. இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

தற்போது சங்கர் தயாள் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’, கண்ணன் இயக்கத்தில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்கிறார். இப்படத்தில்தான் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி. முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க டாப்ஸியுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;