‘தனி ஒருவனு’க்கு சென்சார் சான்றிதழ்?

‘தனி ஒருவனு’க்கு சென்சார் சான்றிதழ்?

செய்திகள் 5-Aug-2015 10:19 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா (ஜெயம் ராஜா) இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படம் நேற்று சென்சார அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்துள்ளர். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ராம்ஜி கவனித்துள்ளார். ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம், மோகன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள படம் என பல சிறப்புக்கள் உள்ள இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியித் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;