அஜித்துக்கு கதை ரெடி பண்ணச் சொல்லிய ராஜமௌலி!

அஜித்துக்கு கதை ரெடி பண்ணச் சொல்லிய ராஜமௌலி!

செய்திகள் 5-Aug-2015 9:32 AM IST Chandru கருத்துக்கள்

500 கோடிகளைக் கடந்து இன்னும் வசூல் செய்து கொண்டிருக்கும் ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிதான் தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் ‘மோஸ்ட் வான்டட் இயக்குனர்’. அவர் தற்போது ‘பாகுபலி’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி எந்த ஹீரோவை இயக்குவார் என்பதுதான் தென்னிந்திய சினிமாவின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

‘பாகுபலி’ படத்தின் புரமோஷன் பணிகளுக்காக சமீபத்தில் சென்னை வந்த ராஜமௌலியிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தமிழில் என் முதல் சாய்ஸ் ரஜினி சார்தான். அதன்பிறகு சூர்யா அவர்களையும் இயக்க ஆவலாக உள்ளேன். அதேபோல் அஜித் சாரையும் நான் இரண்டொருமுறை சந்தித்திருக்கிறேன். அற்புதமான மனிதர் அவர். அவரையும் இயக்க வேண்டும் என்பது என் விருப்பம்!’’ என தெரிவித்திருந்தார். வழக்கமாக எல்லோருமே சொல்லும் பதில்தான் இது என்றாலும், அஜித்திற்காக தன் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம், ராஜமௌலி கதை உருவாக்கச் சொல்லியிருக்கும் விஷயம் தற்போது வெளிவந்திருக்கிறது.

‘பாகுபலி’ படத்தின் கதை எழுதியவர் ராஜமௌலியின் தந்தையான கே.வி.விஜயேந்திர பிரசாத்தான். ராஜமௌலியின் பெரும்பாலான படங்களுக்கு கதை எழுதியிருக்கும் இவர், சமீபத்திய பிளாக்பஸ்டர் பாலிவுட் படமான சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்திற்கும் கதை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.விஜயேந்திர பிரசாத் தெலுங்கு சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்தபோது ‘‘தன்னுடைய அடுத்த படத்திற்கு ராஜமௌலி வித்தியாசமான கதை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அஜித், அல்லு அர்ஜுன் போன்றோரை மனதில் வைத்து அப்படத்தின் கதை எழுதுங்கள் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லாம் சரியாக வந்தால் 2017ல் ராஜமௌலி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வெளிவர வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;