ஜீவாவின் புதிய படத்தில் ‘புலி’ நாயகி!

ஜீவாவின் புதிய படத்தில் ‘புலி’ நாயகி!

செய்திகள் 5-Aug-2015 8:54 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளிவிட்டு தற்போது திருநாள், கவலை வேண்டாம் என இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. இதனைத் தொடர்ந்து ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஜீவா நடிக்க இருக்கும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இப்படத்தின் நாயகியாக நடிகை ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

விஜய்யுடன் ‘வேலாயுதம்’, ‘புலி’ என இரண்டு படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா விஜய்யின் நண்பரான ஜீவாவுடன் முதல்முறையாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஹன்சிகா ‘தூய்மை இந்தியா திட்ட’ குழுவினராக நடிக்க இருக்கிறார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்திருக்கிறது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இப்பட வேலைகள் முடிவடைந்து, அக்டோபர் மாதம் முதல் ஜீவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;