எம்.எஸ்.வி., இராவுத்தருக்கு புகழஞ்சலி

எம்.எஸ்.வி., இராவுத்தருக்கு புகழஞ்சலி

செய்திகள் 4-Aug-2015 3:32 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் (சினிமா பி.ஆர்.ஓ.) யூனியன் சாபில் மறைந்த முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர் சஙகத்தின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான அ.செ.இப்ராகிம் ராவுத்தர் மற்றும் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் வருகிற 9-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி அளவில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் துவக்கமாக PRASAD IN RAP ORCHESTRA சார்பில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் கொண்ட இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இதனை இச்சங்கத்தின் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பொருளாளர் மௌனம் ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;