விஷ்ணு படத்தில் கதை கேட்காமல் நடிக்கும் ஆர்யா!

விஷ்ணு படத்தில் கதை கேட்காமல் நடிக்கும் ஆர்யா!

செய்திகள் 4-Aug-2015 2:14 PM IST VRC கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம் ‘யட்சன்’. ஆனந்த விகடனில் சுபா எழுதி வெளிவந்த ஒரு தொடர் கதையின் கருவை வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னிதி, சுவாதி முதலானோர் நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தனும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணுவர்தனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.விஜய் பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து ‘யட்சன்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது வழக்கம் போலவே தமாஷாக பேசிய ஆர்யா,
‘‘இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த ‘யுடிவி’ தனஞ்சயன் சாருக்கு நன்றி! ‘யுடிவி’க்காக நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நிறுவனம் அது. விஷ்ணுவர்தனோட ‘அறிந்தும் அறியாமலும்’ பட காலத்திலிருந்து நான் அவன் கூட இருக்கிறேன். இங்கு எல்லோரும் நான் இப்படத்தின் கதையை கேட்காமல் நடித்திருப்பதாக பேசினார்கள். உண்மை என்னவென்றால் விஷ்ணு சாதாரணமாக ஒரு சீனை பற்றி சொல்லவே நிறைய நேரத்தை எடுப்பான். அப்படியிருக்கும் போது அவன் ஒரு கதையை சொல்ல ஆறேழு மணி நேரம் எடுப்பான். அதைவிட கதையை கேட்காமலே நடித்துவிட்டு போகலாம்! ஆனால் அவன் திறமையானவன். அந்த நம்பிக்கையில் தான் நான் அவனிடம் கதையை கேட்காமல் நடிக்கிறேன்.

அதைபோலதான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் யுவனும்! நான் இதுவரை 25 படங்கள் பண்ணியிருக்கிறேன் என்றால் அதில் 27 படங்களுக்கும் (பெரும்பாலான படங்களுக்கு..) யுவன் தான் இசை! நான் நடிக்க வந்த காலத்தில் என்னை எல்லோருக்கும் தெரிய வைத்தது யுவனோட ‘தீ பிடிக்க…’ பாடல் தான்! யுவன், பா.விஜய், விஷ்ணு காம்பினேஷன்ல அமைந்துள்ள இப்படத்தின ஆல்பம் என்னோட ஃபேவரிட் ஆல்பமாக அமைந்துள்ளது.

பாடலாசிரியர் பா.விஜய் பேசும்போது, ‘இப்படத்தின் மூலம் எனக்கு ஆர்யாவுடன் நல்ல நட்பு கிடைத்தாக சொல்லி என்னை ஒவர் பில்டப் பண்ணினார். எனக்கும் அவரை பிடித்திருக்கிறது. சொல்லப் போனால் ஹீரோயின்களை விட பிடித்திருக்கிறது (அரங்கத்தில் கைதட்டல்களுடன் ஒரே சிரிப்பு…) அது மாதிரி இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷையும் எனக்குப் பிடிக்கும். காரணம், அவரோட ஒளிப்பதிவு மாதிரியே அவரோட ஹேர் ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கிறது. அதுமாதிரி இப்படத்தில் நீங்கள் நடிப்பில் வேறொரு கிருஷ்ணாவை பார்க்கப் போகிறீர்கள்! பியூட்டிஃபுல் ஹீரோயின் தீபா சன்னிதிக்கும் இப்படத்தில் நல்ல கேரக்டர்! அவரை சுற்றி தான் படத்தின் கதையே நகரும். ‘யட்சன்’ அனைவருக்குமான படம்” என்றார் ஆர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;