பிரசாந்துடன் இணையும் சிம்பு!

பிரசாந்துடன் இணையும் சிம்பு!

செய்திகள் 4-Aug-2015 12:01 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் தியாகராஜன் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘சாஹசம்’. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கும் இப்படத்தில் அவரது மகன் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமண்டா நடிக்கிறார். இப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரி ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் நடனம் ஆடியியுள்ளார். இவர்களுடன் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, லீமா பாபு , சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

தமன் இசை அமைக்கும் இப்படத்திற்காக ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், மோஹித் சவான், சிம்பு என பலர் பாடல்களை பாடியுள்ளனர். இதில் பெரும்பாலான பாடல்களை மலேசியா, சிங்கப்பூர், அஸ்திரேலியா, ஜப்பான் முதலான வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். ‘சாஹசம்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை காலை 11 மணி அளவில் நடிகர் சிம்பு வெளியிட இருக்கிறார். பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தியாகராஜன். இந்த விழாவில் இப்படத்திற்காக பின்ணி பாடியுள்ள அனைத்து பாடகர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம் ‘சாஹசம்’ படம ரிலீஸ் ஆகும் என்றார் தியாகராஜன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;