லாரன்ஸின் 1 கோடி ரூபாய் : கலாம் பெயரில் புதிய அமைப்பு!

லாரன்ஸின் 1 கோடி ரூபாய் : கலாம் பெயரில் புதிய அமைப்பு!

செய்திகள் 4-Aug-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இயக்கி, நடித்து வசூலை அள்ளிய படம் ‘காஞ்சனா -2’. இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸிடம் படம் இயக்கித் தரும்படி கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் அணுகியுளளன! இந்நிலையில் ‘வேந்தர் மூவிஸு’க்காக இரண்டு படங்களை இயக்கி, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் இந்த இரண்டு படங்களுக்காக ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் ராகவா லாரன்ஸுக்கு 1 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கியது. இந்த 1 கோடி ரூபாயை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் குடும்பங்களுக்கு செலவழிக்கப் போவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ். இதற்காக மறைந்த அப்துல் கலாமின் பெயரில் ‘கலாமின் காலடிச்சுவட்டில்...’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த உதவிகளை செய்ய இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதை நடைமுறைப்படுத்தி செயல்பட வைக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அவரது ஆலோசனையின்படி தமிழகத்தில் உள்ள நேர்மையான 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தலா 1 லட்சம் வழங்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அந்த 100 இளைஞ்ரகள் மூலமாக ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக இந்த தொகையை செலவிடப் போவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ். இந்த அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யல்லாம் என்றும் அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;