லாரன்ஸ்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

லாரன்ஸ்க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

செய்திகள் 4-Aug-2015 9:12 AM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என இரண்டு படங்களை இயக்கி, நடிக்க உள்ளார். வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படங்களின் பூஜையும், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும் நேற்று நடைபெற்றது.

‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமி (லட்சுமி ராய்) நடித்திருந்தார். ‘காஞ்சனா-2’வில் டாப்சி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கி நடிக்கும் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரஸுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் இன்னொரு படமான ‘நாகா’வில் யார் கதாநாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;