500 கோடி கிளப்பில் இடம் பிடித்தது பாகுபலி!

500 கோடி கிளப்பில் இடம் பிடித்தது பாகுபலி!

செய்திகள் 3-Aug-2015 3:18 PM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலியின் ‘பாகுபலி’ படம் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் 3 நாட்களிலேயே 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை புரிந்தது. அதற்கடுத்து 15 நாட்களில் இப்படத்தின் ஒட்டு மொத்த வசூல் 400 கோடியாக உயர்ந்தது. தென்னிந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை ஷங்கரின் ‘எந்திரன்’ தக்கவைத்து கொண்டிருந்தது. ஆனால் 15 நாட்களிலெயே 400 கோடிக்கும் மேல் வசூல செய்து ‘எந்திரன்’ படத்தின் வசூல் சாதனையை ‘பாகுபலி’ முறியடித்த்தோடு, இப்படம் இன்னும் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ‘பாகுபலி’ வெளியாகி 4 வாரங்கள் தான் ஆகிறது. இந்த நான்கு வார காலயளவில் ‘பாகுபலி’ 500 கோடிக்கும் மேல் வசூல் செயது, தென்னிந்தியாவின் 500 கோடி கிளப்பில் இடம் பிடித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘பாகுபலி’ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அளவில் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களாக ஆமீர்கானின் ‘தூம்-3’, ‘பீகே’ மற்றும் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பஜ்ரங்கி பைஜான்’ ஆகிய படங்கள் இருந்து வருகிறது. இந்திய அளவில் இந்த படங்களின் சாதனையை ‘பாகுபலி’ முறியடிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;