தமிழில் பிரபுதேவா தயாரிக்கும் 3 படங்கள்!

தமிழில் பிரபுதேவா தயாரிக்கும் 3 படங்கள்!

கட்டுரை 3-Aug-2015 12:05 PM IST VRC கருத்துக்கள்

திரையுலகில் நடன கலைஞராக, நடன இயக்குனராக, திரைப்பட இயக்குனராக வலம் வந்த பிரபுதேவா அடுத்து திரைப்பட தயாரிப்பாளரகாவும் அவதாரம் எடுக்கிறார். இதற்காக அவர் துவங்கப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’. இந்த நிறுவனத்தின் சார்பில் பிரபுதேவா ஒரே நேரத்தில் 3 தமிழ் படங்களை தயாரிக்கிறார்.
இதில் முதல் படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எல்.விஜய், அமலா பால் தம்பதியர் தயாரிப்பில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி முதலானோர் நடிப்பில் ஒரு படம் தயாராகிறது. இப்போது இப்படத்தின் தயாரிப்பில் பிரபு தேவாவின் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்துள்ளது. ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு ப்ரியதர்ஷன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்பட்த்தின் படப்பிடிப்புகள் துவங்கி விட்டன.

பிரபுதேவா தயாரிக்கும் இரண்டாவது படத்தை சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்குகிறார். இப்படத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஹீரோவாக நடித்த ‘ஜெயம்’ ரவியே கதாநாயகனாக நடிக்க, இசைக்கு டி.இமான், படத்தொகுப்புக்கு ஆன்டனி என ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இணைந்த பலர் இப்படத்திலும் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கும் இன்னும் பெயரிடப்படவில்லை.

பிரபுதேவா தயாரிக்கும் மூன்றாவது படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டென்ட் விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார். ‘வினோதன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐசரி வேலனின் பேரனும், ஐசரி கணேஷின் மகனுமான வருண் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மென்டல் டிஸ் ஆர்டர் பற்றிய கதையாம் இது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவிடம் உதவியாளராக இருந்த சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, இந்த படத்திற்கும் டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த 3 படங்கள் குறித்த அறிவுப்பு விழாவில் பிரபு தேவா பேசும்போது, ‘ஒரு நடிகரா இருந்த சமயத்தில் சின்னதா தான் டென்ஷன் இருந்தது. ஆனால் இயக்குனராக மாறிய பிறகு படத்தை எடுத்து முடித்து வெளியிடுகிற நேரத்தில் 100 சதவிகித டென்ஷன் இருக்கும். அனால் இப்போது டென்ஷன் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறாது! சொல்லப் போனால இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்கவில்லை! பார்ப்போம்’’ என்றார்.

இவ்விழாவில் இயக்குனர்கள் ப்ரியதர்ஷன், ஏ.எல்.விஜய், லட்சுமண், இசை அமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், அமலா பால் விஜய், மதன் கார்க்கி, வருண், ஐசரி வேலன், எடிட்டர் ஆன்டனி, ‘ஜெயம்’ ரவி, பிரகாஷ் ராஜ் முதலானோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ


;