ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

செய்திகள் 3-Aug-2015 12:05 PM IST Chandru கருத்துக்கள்

‘காஞ்சனா 2’வின் இமாலய வெற்றிக்குப் பின்னர் ராகவா லாரன்ஸ் படங்களுக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. இப்படம் தயாராகிக் கொண்டிருந்தபோதே தனது இன்னொரு படமான ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்ற படத்திற்கு பூஜை போட்டார் லாரன்ஸ். ஆனால், காஞ்சனா 2 வெளிவந்து கலெக்ஷனில் சக்கைபோடு போட, அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

‘காஞ்சனா 2’வின் பிரபல வசனமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்பதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார்கள். இன்னொரு படத்திற்கு ‘நாகா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்று ‘காஞ்சனா’வின் 3ஆம் பாகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்று இப்படங்களின் பூஜை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்கள் நாளை வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;