சென்சாரில் ‘VSOP’க்கு என்ன சர்டிஃபிக்கெட்?

சென்சாரில் ‘VSOP’க்கு என்ன சர்டிஃபிக்கெட்?

செய்திகள் 1-Aug-2015 10:49 AM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் நேற்று சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘VSOP’ க்கு அனைவரும் பார்க்கக் கூடிய படத்திற்கான ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! இதனால் ‘VSOP’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆர்யா தனது ‘தி ஷோ பீப்புள்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘VSOP’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வி ஐ பி 2 - மோஷன் போஸ்டர்


;