‘நேரம்’ பட இயக்குனருக்கு திருமணம்!

‘நேரம்’ பட இயக்குனருக்கு திருமணம்!

செய்திகள் 1-Aug-2015 10:24 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா முதலானோர் நடிப்பில் ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இவர் தனது இரண்டாவது படமாக இயக்கிய ‘பிரேமம்’ மலையாள படமும் சமீபத்தில் ரிலீசாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. அத்துடன் இணையத்திலும் இப்படம் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. கேரளா, ஆலுவாவை சேர்ந்தவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அல்போன்ஸ் புத்திரன் கொச்சியை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்டணியின் மகள் அலினா மேரியை மணக்க இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 17-ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து 22-ஆம் தேதி திருமணம் நடக்கிறது. அலினா மேரி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இயக்கிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கையிலும் காலடி எடுத்து வைக்க இருக்கும் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;