தயாரிப்பாளராகிறார் பிரபுதேவா!

தயாரிப்பாளராகிறார் பிரபுதேவா!

செய்திகள் 1-Aug-2015 10:09 AM IST VRC கருத்துக்கள்

நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என்று சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி கண்டுள்ளவர் பிரபுதேவா. இவர் அடுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் உருவெடுக்கிறார். இதற்காக ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்பை வருகிற 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார் பிரபு தேவா. சர்வதேச தரத்தில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள பிரபு தேவா தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். திறமையுள்ள புதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்னுரிமை கொடுக்க உள்ளாராம் பிரபு தேவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;