சிம்புவுக்கு விஜய் உதவி!

சிம்புவுக்கு விஜய் உதவி!

செய்திகள் 31-Jul-2015 11:08 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘வாலு’. பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் ஒரு சில பிரச்சனைகளால் இப்படம் அந்த தேதிகளில் வெளியாகவில்லை. இதனால் சிம்பு உட்பட ‘வாலு’ டக்குழுவினர் அனைவரும் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலியைல் நடிகர் விஜய், ‘வாலு’ படப் பிரச்சனையை கேள்விப்பட்டு தனக்கு நெருக்கமான விநியோகஸ்தர்களிடம், ‘சிம்புவின் ‘வாலு’ பட பிரச்சனையை முடித்துக் கொடுங்கள்’ என்று கூறி இருக்கிறார். இதனால் சிம்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இதற்கு விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நிஜமான ஆதரவு தந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு பிரச்சனை வந்தபோது சிம்பு குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாலு’ பட பிரச்சனைகள் ஒரு சில நாட்களுக்கு முன் தீர்ந்து விட்டதாகவும் இதனால் இப்படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;