‘பீகே’ சாதனையை முறியடிக்குமா பஜ்ரங்கி பைஜான்?

‘பீகே’ சாதனையை முறியடிக்குமா பஜ்ரங்கி பைஜான்?

செய்திகள் 31-Jul-2015 10:29 AM IST VRC கருத்துக்கள்

சல்மான் கான் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வசூலை குவித்து வரும் ஹிந்தி படம் ‘பஜ்ரங்கி பைஜான்’. இந்தியா, பாகிஸ்தான் இடையே நட்புறவைப் ஏற்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுக்க வெளியான இப்படம் கடந்த இரண்டு வாரத்தில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருக்கும் இன்னொரு படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. இந்த படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்திற்கும் கதை ஆசிரியர்! இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை அமீர்கானின் ‘பீகே’ தக்கவைத்து கொண்டிருக்கிறது. இந்த சாதனையை சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ முறியடிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;