பரவை முனியம்மாவுக்கு தனுஷ் 5 லட்சம் உதவி!

பரவை முனியம்மாவுக்கு தனுஷ் 5 லட்சம் உதவி!

செய்திகள் 31-Jul-2015 10:08 AM IST VRC கருத்துக்கள்

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் நடிகையும், சில பாடல்களை பாடியுள்ளவருமான பரவை முனியம்மா. சிகிச்சைக்கு போதுமான பணவசதி இல்லாமல் பரவை முனியம்மா கஷ்டப்பட்டு வருகிறார் என்பதை கேள்விப்பட்டு நடிகர் விஷால் சமீபத்தில் அவரை சந்தித்து 5 ஆயிரம் ரூபாய் உதவி செய்தார். அத்துடன் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் கூறி இருக்கிறார் விஷால். இதனை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் பரவை முனியம்மாவை சந்தித்து அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் பரவை முனியம்மா உடல் நிலை குறித்து அறிந்த நடிகர் தனுஷ் அவருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் பரவை முனியம்மா சீக்கிரம் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனயும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;