‘‘பஞ்ச்’க்காகவே 3 குழுக்களை வைத்திருப்பவர் சந்தானம்!’’ -ஆர்யா

‘‘பஞ்ச்’க்காகவே 3 குழுக்களை வைத்திருப்பவர் சந்தானம்!’’  -ஆர்யா

செய்திகள் 30-Jul-2015 1:51 PM IST VRC கருத்துக்கள்

தனது ‘தி ஷோ பீப்புள்’ நிறுவனம் சார்பில் ஆர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. எம். ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் சந்தானம், தமன்னா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 14-ஆம் தேதி உலகம் முழுக்க ஆர்யாவே ரிலீஸ் செய்ய உள்ளார். இப்படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சியில் ஆர்யா சந்தானம் குறித்து பேசும்போது,

‘‘இது எனது 25-ஆவது படம். எம்.ராஜேஷ், சந்தானம் கூட்டணியில் எனது 25-ஆவது படம் அமைந்ததில் ரொம்ப சந்தோஷம்! இப்படத்திற்காக சந்தானம் நல்ல வசனங்களை தந்துள்ளார். இயக்குன்ர் ராஜேஷ் தரும் வசனங்கள் போதுமானதாக இல்லை என்றால், சந்தானம் உடனே அவரது உதவியாளர்களுக்கு ஃபோன் பண்ணி வசனங்களை வரவழைப்பார். இப்படி பஞ்ச் டயலாக், வசனங்கள் எழுதிக்கொடுப்பதற்காகவே சந்தானம் ஏ,பி,சி என்று மூன்று டீம்களை வைத்திருக்கிறார். ஒவ்வொரு டீமிலும் 5 பேர் வீதம் இருக்கிறார்கள். சந்தானம் அவர்களுக்கு ஃபோன் பண்ணினால் போதும்! ஒரு வசனத்திற்கு பதிலாக 3 டீம்களிடமிருந்தும் கிட்டத்தட்ட 15 வசனங்கள் வந்து சேரும். அதிலிருந்து நாங்க பெஸ்ட்டை தேர்ந்தெடுப்போம். இப்படி ப்ளான் செய்து வொர்க் பண்ணுபவர் சந்தானம். அது தான் அவரது வெற்றிக்கும் காரணம். அந்த வகையில் இப்படத்தின் அனைத்து டயலாக்குகளும், ‘பஞ்ச்’ வசனங்களும் சிறப்பாக வந்துள்ளது.

மேலும் என்னுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’; படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரி நடித்திருந்தார் சந்தானம்! இப்படத்திலும் சந்தானம் ஒரு ஹீரோ போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இப்படத்திற்கு சந்தானமும் பக்க பலமாக இருக்கிறார்’’ என்றார் ஆர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;