படப்பிடிப்பு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

படப்பிடிப்பு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

செய்திகள் 30-Jul-2015 1:00 PM IST VRC கருத்துக்கள்

ஃபெப்சி தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சனை காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை, வெளியூர், வெளிநாடுகளில் நடந்து வந்த அனைத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள், இதர வேலைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுக்கும், தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (ஃபெப்சி) இடையில் கடந்த 3 நாட்களாக ஃபிலிம் சேம்பரிட்ல் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து படப்பிடிப்பு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்று (29-7-2015) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,

‘‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (ஃபெப்சி) மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பேச்சு வார்த்தையில் அனைத்து சங்கஙகளுக்குமான சம்பள பிரச்சனையில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தென்னிந்திய ஸ்டன்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் சங்கத்துடன் மட்டும் பேச்சு வார்த்தை நிலுவையில் உள்ளது. மற்ற அமைப்புகளுடன் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங், டப்பிங் போன்ற அனைத்து பணிகளை மீண்டும் நடத்துவது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மறைவையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள ஆணைக்கிணங்கி இன்று (30-7-2015) படப்பிடிப்புகளை ரத்து செய்வது என்றும், வருகிற 31-7-2015 (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் படப்பிடிப்பு மற்றும் அனைத்து படப்பிடிப்பு பணிகளை வழக்கம் போல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் விதிகளை தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘வை ராஜா வை’ உருவான விதம் - வீடியோ


;