‘‘ஒரு தயாரிப்பாளரா ஆர்யா ஜெயிக்கணும்’’ - சந்தானம்

‘‘ஒரு தயாரிப்பாளரா ஆர்யா ஜெயிக்கணும்’’ - சந்தானம்

செய்திகள் 30-Jul-2015 1:00 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது சந்தானம் பேசும்போது,

‘‘இந்தப் படத்திற்கு VSOP (வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க) என்று டைட்டில் வைத்தபோதே இப்படம் ஜெயிக்கும் என்று முடிவு செய்தேன். காரணம் அந்த டைட்டில் அப்படி! ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என நான், ஆர்யா, ராஜேஷ் கூட்டணி தொடர்ந்து வருகிறது. ராஜேஷ், ஆர்யாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்! ராஜேஷ் படத்தில் நடித்ததற்கு முன்னாடி நான் நடித்த பட போஸ்டர்களில் எல்லாம் என் படத்தை சின்னதா தான் போடுவார்கள்! ஆனால் போஸ்டரில் ஹீரோவுக்கு சமமான அளவில் என் ஃபோட்டோவை முதன் முதலில் போட்டது இயக்குனர் ராஜேஷ் தான்! வழக்கமாக பெரும்பாலான ஹீரோக்கள் அதை விரும்பவும் மாட்டார்கள், சம்மதிக்கவும் மாட்டார்கள்! ஆனால் ஆர்யா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நானும் வளரணும் என்ற நல்ல மனசு அவருக்கு! சினிமாவை தவிர்த்து நன்றாக பழகக் கூடிய ஆத்மார்த்தமான ஒரு நண்பர் ஆர்யா!

இந்த படத்தை ஆர்யா தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படத்தை ஆர்யாவே உலகம் முழுக்க வெளியிடவும் இருக்கிறார். ஆர்யாவுக்கு சினிமாவிலிருந்து இதுவரை எதுவும் ரிட்டேன் வந்தது கிடையாது. வந்ததை எல்லாம் சினிமாவுக்காக செலவு செய்துகிட்டே இருக்கிறவர். நடிகரா இல்லாமல், ஒரு தயாரிப்பாளரா ஆர்யாவுக்கு இந்த படம் ஜெயிக்கணும்! அதற்கு உங்க எல்லோரது சப்போர்ட்டும் தேவை’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;