6 இடங்களில் ‘புலி’யின் கிராபிக்ஸ் வேலைகள்!

6 இடங்களில் ‘புலி’யின் கிராபிக்ஸ் வேலைகள்!

செய்திகள் 29-Jul-2015 3:59 PM IST Chandru கருத்துக்கள்

‘புலி’ படத்தின் பரபரப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘புலி’ படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன. அதற்கான விழா பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இவ்விழாவில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதால் கிராபிக்ஸ் வேலைகளை மொத்தம் 6 இடங்களில் பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். மகதீரா, நான் ஈ படங்களில் பணிபுரிந்த கமலக்கண்ணன் தலைமையில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ரஷ்யா, இத்தாலி உட்பட 6 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். புலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறது ‘புலி’ டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;