பரவை முனியம்மாவுக்கு உதவிய விஷால்!

பரவை முனியம்மாவுக்கு உதவிய விஷால்!

செய்திகள் 29-Jul-2015 1:22 PM IST Chandru கருத்துக்கள்

‘சிங்கம் போல பறந்து வரான் செல்லப் பேராண்டி’ போன்ற பாடல்கள் மூலம் தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவை முனியம்மா. சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சமீபகாலமாக பரவை முனியம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இதனால் படத்தில் நடிப்பது, பாடுவது போன்றவற்றை அவரால் செய்ய முடியாத காரணத்தால் வருமானம் இன்றி தவிக்கிறாராம்.

மனநலம் குன்றிய ஒரு மகன் உள்பட இருமகன்கள் அவருக்கு. குடும்பத்தில் பெரிதாக வருமானமில்லை சிரமப்படுவதாக பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். இதைப் படித்த நடிகர் விஷால் உடனடியாக உதவ முன்வந்திருக்கிறார். கோவை & மதுரை சுற்றுப் பயணத்திலிருந்த விஷால் நேரடியாக பரவை முனியம்மாவை அவரது ஊரில் சந்தித்தாராம். நேரில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததுடன் இனி மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கி உதவுவதாக உறுதியளித்ததுடன் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று வந்திருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;