சர்வம், ஆரம்பம் கூட்டணியின் அடுத்த வெளியீடு!

சர்வம், ஆரம்பம் கூட்டணியின் அடுத்த வெளியீடு!

செய்திகள் 29-Jul-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி முதலானோர் நடிப்பில் விஷ்ணுவர்ததன் இயக்கி வரும் படம் ‘யட்சன்’. யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ‘ஆரம்பம்’ படத்திற்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கி வரும் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான்! இவர்கள் இருவரும் இணைந்த ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ உட்பட அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களாகும். அந்த வரிசையில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘யட்சன்’ படப் பாடல்களை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் பிசியாகியுள்ளனர் இப்படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;