விஜய்யின் அழைப்பை ஏற்ற மகேஷ்பாபு!

விஜய்யின் அழைப்பை ஏற்ற மகேஷ்பாபு!

செய்திகள் 29-Jul-2015 10:42 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ஆடியோ விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதேபோல் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படமான ‘ஸ்ரீமந்துடு’ ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகும் அதே நாளில் தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு இப்படம் வெளியாகிறது. ‘புலி’ ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதிஹாசன்தான் ‘ஸ்ரீமந்துடு’விலும் ஹீரோயின். அதேபோல் இரண்டு படங்களின் இசையமைப்பாளரும் தேவி ஸ்ரீ பிரசாத்தான்.

இதனால் ‘செல்வந்தன்’ புரமோஷனுக்காக சென்னைக்கு வரும் மகேஷ்பாபுவை ‘புலி’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு விஜய் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை மகேஷ்பாபுவும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். இதனால் ஒரே மேடையில் விஜய்யையும், மகேஷ்பாபுவையும் தரிசிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;