அப்துல் கலாமுக்கு ‘ஆகம்’ படக்குழுவினர் மரியாதை!

அப்துல் கலாமுக்கு ‘ஆகம்’ படக்குழுவினர் மரியாதை!

செய்திகள் 28-Jul-2015 5:28 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கத்த்தில் ‘ஜோஸ்டார் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பாக கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் படம் ‘ஆகம்’. இந்த திரைப்படக்குழுவினர் மறைந்த மாமேதை அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இன்றைய கல்வியின் நிலையை பற்றியும், கற்ற கல்விக்கான வேலை வாய்ப்புகள் தரத்தை பற்றியும் நேரடியாக சொல்லும் கதைதானாம் ‘ஆகம்’ படம்!
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கூறும்போது, ‘‘ஒவ்வொரு தனி மனித தேவையும், சமூதாய நிலையும் இன்றைய காலக்கட்டத்தில் வேலை வாய்ப்புக்கான தேடலை அதிகப்படுத்தியுள்ளது. உலகெங்கும் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகளை எட்டிப்பிடிக்க நினைக்கும் இன்றைய சமூதாயத்தின் வெளிநாட்டு மோகமும், தான் நிலைபெற வேண்டும் என்ற எண்ணமும் இன்று பல இளைஞர்களை உலுக்கி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கணக்கில் ஊழலும் நடந்து வருகிறது.

சுதந்திரத்துக்கு முன் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்திருந்தன. அதேபோல் இன்று இந்தியாவை வளர்ச்சி பாதையில் இட்டுசெல்ல ‘இந்தியனே வெளியேறாதே’ என்ற முழக்கம் ஒவ்வொரு மாணவனுக்கும் எட்டும் வகையில் ஒலிக்க செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையும் ஆராயும் படம் தான் ‘ஆகம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அரசகுலம் - டிரைலர்


;